அதிகாரம் – 14 – குறள் – 140

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார். விளக்கம்:- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் – உலகத்தோடு பொருந்த ஒழுகதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் – பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். உலகம் – உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. இதுவே தமிழர் பண்பாடு. உயர்ந்தவரோடு ஒத்து நட என்பதே இதன் பொருளாகும். ஒழுக்குவது – மேலேயிருந்து ஒழுகுவது. உயர்ந்தோரிடம் இருந்து வருவதற்குப் பெயரே ஒழுக்கம். ஆகவே உலகத்தோடொட்ட ஒழுகுவது என்றால் உயர்ந்தவர்களோடு ஒட்டுவதாகும். […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். விளக்கம்:- வழுக்கியும் தீய வாயால் சொலல் – மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா – ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. ஒழுக்கமுடையவர்கள் (வழுக்கி) தவறியும் கூடத் தீய சொற்களைச் சொல்லமாட்டார்கள். பேசுவதற்கு இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்கள் எதற்கு? இதை இனியவை கூறல் அதிகாரத்தில் தெளிவாக நாம் படித்துள்ளோம். இதையே வீட்டிலும் கடைபிடிக்க வேண்டும். தீய சொற்களைப் பேசுபவர்கள் […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். விளக்கம்:- நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும். […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி. விளக்கம்:- ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் – எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் – அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் அந்த ஒழுக்கத்தாலே உயர்வை அடைவார். அப்படியானால் ஒழுக்கந்தவறி நடந்தால் என்ன நிலை என்ற கேள்வி வருகிறது. ஒழுக்கந்தவறினால் உயர்வும் கிடைக்காது அதே நேரம் தாழ்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர். தேவை இல்லாத தவறை ஒருவர் செய்கிறாரென்றால் […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 136

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. விளக்கம்:- ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து – அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. மனிதன் எப்போதும் தான் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். தவறையேச் செய்தாலும் பொய்கூறியாவது தான் ஒழுக்கமுள்ளவன் என்றே நிரூபிக்க விரும்புகிறான். ஆனால் மனதிலே உரமுள்ளவர்கள் எவ்வளவு கடினப்பட்டேனும் ஒழுக்கத்தையே கடைபிடிக்க […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம்:- அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை) ஆக்கம் – செல்வம் பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது. […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். விளக்கம்:- ஓத்து மறப்பினும் கொளலாகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். கல்வியாளராகிய பிராமண வருணத்தைச் சேர்ந்தவர் தான் கற்ற வேதத்தினை மறந்தாலும் பின்பு அதனைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் தவறிப் போவாராயின் அவர் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவராகி விடுவார். […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 133

ஒழுக்க முடைமை குடைமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். விளக்கம்:- ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். வருணம் என்ற நான்கு பிரிவுகள் பற்றி முதல் குறளிலே படித்தோம். உற்பத்தியாளர் – சூத்திரர் விநியோகஸ்தர் – வைசியர் நிர்வாகி – சத்திரியர் கல்வியாளர் – பிராமணர் இந்த நான்கு வருணங்களுக்குள்ளும் குலப் பிரிவுகள் உண்டு. அவர்கள் […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. விளக்கம்:- ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க – ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே – அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ‘இவற்றுள் இருமைக்கு துணையாவது யாது?’ என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது என்று முதல் குறளிலே படித்தோம். அப்படி உயர்வான ஒழுக்கத்தைப் பேணியும் வருந்தியும் கூட காக்க […]

Continue Reading

ஒழுக்கம் உடைமை

அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின், அடக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது. மனிதன் ஏன் ஒழுக்கமுடையவனாக வாழ வேண்டும்? இல்லறத்தைச் சிறப்பிக்க ஒழுக்கம் முக்கியம். மனிதன் சென்று கொண்டிருக்கும் அன்புப்பாதை விருத்தியடைவதற்கும் ஒழுக்கம் அவசியம். அன்பு குறைந்தால் இல்லறத்தின் நோக்கம் சிதைந்துவிடும். ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம் முக்கியமாக இருக்க வேண்டுமானால் அடக்கம் முக்கியம். ஆகவே, ஒழுக்கமுடைமைக்கு முன்னதாக அடக்கமுடைமையை வைத்தார். ஐம்புலன்களும் நம்மோடு வரவேண்டும். நாம் […]

Continue Reading