கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
இக்குறளைப் படிக்கும் போது ‘கொல்’ என்ற சொல் இக்குறளோடு பொருந்தாமலும் அர்த்தம் புரியாமலும் இருக்கிறது. இதுவே அசைச்சொல் எனப்படும்.
புலவர்கள் செய்யுள் இயற்றும்போது வெண்பா இப்படி இருக்க வேண்டும். விருத்தம் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை உண்டு. இந்த வரையறைக்குள்ளே பாட்டு சொற்களை அமைக்க வேண்டும். சொல்லுக்குள்ளே பொருள் அமைக்க வேண்டும். பழைய காலத்திலே யாப்பு இருந்தது. ஓசை குழம்பாமல் எல்லா வரியும் இருக்க வேண்டும். (யாப்பு – கட்டு) இப்படிச் சொற்களைக் கட்ட வேண்டும். புலவர்கள் இப்படி செய்யுள் இயற்றும்போது பொருள் முடிந்த பிறகும் சொல் முடியாமல் இருக்கும். எனவே ஓசையை நிறைவு செய்ய ஏதோ ஒரு சொல்லைப் போட்டு நிறைவு செய்வர். இதற்கு பொருளைத் தேடக்கூடாது என்று அர்த்தம். இதுவே அசைச்சொல் ஆகும்.
கற்றதனால் ஆய பயன் என் பொருள் முடிந்தது. வாலறிவன் நற்றாள் தொழாஅர் ரெனின் பொருள் முடிந்தது. ஆனால் ஓசை முடியவில்லை. எனவே அர்த்தமில்லாத சொல்லான ‘கொல்’ என்ற சொல்லைப்போட்டு ஓசையை நிறைவு செய்திருக்கிறார் வள்ளுவர்.