அடக்கமுடைமை

இலக்கியம்

அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம் போல் தம் குற்றமும் காணும் நடுவுநிலைமை உடையார்க்கு ஆதலின், இது நடுவு நிலைமையின் பின் வைக்கப்பட்டது.

இல்லறவியலில் ஒரு தனிமனிதனுடைய வாழ்வைப் பற்றித் தொடர்ச்சியாக்க் கூறிவருகிறார். இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இனியச் சொற்களைப் பேசி விருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து நன்றியுணர்வுடன் இருந்து நடுவுநிலைமையுடன் இருந்து சமுதாயத் தொடர்பில் வந்த தனிமனிதன் மேலும் வளர வேண்டுமானால் மூன்றுக் குற்றங்களை நீக்க வேண்டும்.

அடக்கமும் ஒழுக்கமும் இருந்தால் மட்டுமே இனி வரக் கூடிய அறங்களை இந்த இல்வாழ்வான் கடைபிடிக்க முடியும்.

இல்லறத்தின் இலட்சணம் சமுதாயத் தொடர்பாகும். நேர்மையாளன் நேர்மையாகச் சமுதாயத்தைக் கையாளுகிறான்.

மூன்றுக் குற்றங்கள் :-

  1. மனக்குற்றம்
  2. வாக்குக்குற்றம்
  3. செயல் குற்றம்

இம்மூன்றுக் குற்றங்களையும் நீக்கினால் சமுதாயத்தில் இல்வாழ்வானின் மதிப்பு உயரும். இக்குற்றங்களை நீக்குவதற்கு அடக்கமும் ஒழுக்கமும் வேண்டும். இதற்காகவே இவ்விரு அதிகாரங்களை வைத்திருக்கிறார் வள்ளுவர்.

அடக்கம்:-

தன்னைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. மனதாலே, வாக்காலே, உடம்பாலே செய்கின்றச் செயல்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.

நல்லதையேச் செய்ய வேண்டும்.

நல்லதையே நினைக்க வேண்டும்.

நல்லதையேப் பேச வேண்டும்.

அதிகாரம் – 13 – குறள் – 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

விளக்கம்:-

அடக்கம் அமரருள் உய்க்கும் – ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் – அடங்காமையாகிய பாவம் தங்குவதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.

திருவள்ளுவர் எப்பொழுதும் தான் எடுத்துக் கொண்ட விடயத்தை முதல் குறளில் வலியுறுத்துக் கூறுவார். இங்கே அடக்கத்தைப் பற்றி வலியுறுத்துகிறார். நமது மனம், மொழி, மெய்களை அடக்கி வாழ்ந்தால் அது நம்மை தேவர் உலகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஒரு கணவரோ அல்லது பெற்றோரோ நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனைவியோ பிள்ளைகளோ அடங்குவது நல்லதே. இதற்கு அடிமைத்தனம் என்று பொருளல்ல.

அடங்காமை ஆர் இருள் உய்க்கும். ஆர் இருள் – நரக விசேடம். அதாவது நரகங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று ஆர் இருள். இந்த நரகமாகிய ஆர் இருளில் அடங்காமை என்ற குணம் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். இங்கே உய்க்கும் என்பதையே உய்த்துவிடும் என்று கூறுகிறார். (உய்க்கும் – செலுத்தும்) உய்த்துவிடும் என்பது ஓசைக்காகப் போடப்பட்டது. ஒரே சொல் ஆகவே உய்த்து, விடும் என்று பிரிக்கக்கூடாது.

அடக்கம் என்பதே அறம் என்று பரிமேலழகர் உரையெழுதுகிறார். அடங்கி நடந்தால் தேவருலகிற்குச் செல்வோம். அடங்காவிட்டால் இருளாகிய நரகத்திற்குச் செல்வோம். எனவே நமது மனம், மொழி, மெய்களைக் கட்டுப்படுத்தி அடக்கமாகிய அறத்தைக் கடைபிடிப்போமாக.

31 thoughts on “அடக்கமுடைமை

  1. Blendr/GrindrThe gay men-finding app Grindr has gained an impressive following of 4 million users, and its co-ed partner, Blendr, is following suit. Both allow you search the social network of nearby singles looking to connect.Good for: Casual flings.Price: Free For its part, Grindr told the Washington Post that “there is absolutely no evidence supporting the allegations of improper data collection or usage related to the Grindr app as purported” and that it was “infeasible from a technical standpoint and incredibly unlikely.” Raymond Zage III, the founder and CEO of the SPAC, was a member of San Vicente, a consortium of investors that bought Grindr from Beijing’s Kunlun Tech Co in 2020. In addition to hiring a new CEO, Grindr also appointed a new CFO, the former CFO of Disney Streaming Service Vanna Krantz, who launched and grew the highly successful Disney+ product. Grindr’s outgoing CEO Jeff Bonforte and CFO Gary Hsueh will move into advisory roles going forward, according to NBC News.
    https://mylespzev724321.loginblogin.com/19314582/friendship-and-dating-sites
    Online dating sites are a great place to meet other single people online, whether you’re looking for a lifelong companion or just a casual connection with someone. All you need to do is sign up for a free dating app, set up your dating profile with a photo and some information about yourself, and you’re all set to go. Please validate the Captcha While most dating apps rely on swiping, long survey responses and personal profile data, Pickable gives men a platform that is uncomplicated and promotes instant gratification. For women, this creates a worry-free dating experience, that is seamless, comfortable, and private. Signing up with Meetic.es also gives you access to all of the country-specific Meetic sites across Europe, each one in that country’s native language.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *