அதிகாரம் – 1 – குறள் – 1

Uncategorized

கடவுள் வாழ்த்து;-

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

விளக்கம்;-

கடவுள் வாழ்த்து இருவகைப்படும்.

1 ஏற்புடைய கடவுள் வாழ்த்து.

2. வழிபடுகிற கடவுள் வாழ்த்து

சாத்வீகம் – அறம்

இராட்சசம் – பொருள்

தாமசம் – இன்பம்

இம்மூன்றையும் பொதுப்பட வாழ்த்துகிறார் வள்ளுவர். எனவே, இது ஏற்புடைய கடவுள் வாழ்த்து. அட்சரங்களெல்லாம் அகரத்தை முதலாய்க் கொண்டிருக்கின்றன. முதல் என்றால் மூலம் என்று பொருள். உலக மொழிகளின் அத்தனை அட்சரங்களும் 4 வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது.

அவை

  1. பூஜ்ஜியம்
  2. பிறைவடிவம்
  3. கிடைக்கோடு
  4. நெடுங்கோடு

இது அனைத்தும் ‘அ’ என்ற அகரத்தில் உள்ளது. எழுத்து என்றால் அதில் வரி வடிவமும் ஒலி வடிவமும் இருக்க வேண்டும். உலக மொழிகள் அனைத்தும் அ என்று உச்சரிக்கும் எழுத்தையே முதல் எழுத்தாக கொண்டிருக்கிறது.  அதேபோல வரிவடிவமும் மேலே சொல்லப்பட்ட நான்கில் ஒரு வடிவத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழின் அகரம் அந்த நான்கையும் ஒருங்கே கொண்டதாக இருக்கிறது. இதைத்தான் திருவள்ளுவர் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாய்க் கொண்டிருக்கின்றன என்கிறார்.

எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ முதலாக மூலமாக இருப்பதைப் போல இவ்வுலகத்திற்கு ஆண்டவன் மூலமாக இருக்கிறான். எனவே உலகத்தைப் பார்த்தாலே கடவுள் இருக்கிறார் என்று உணரலாம். உலகத்திற்கு இறைவன் தலைமை. அட்சரங்களுக்கு அகரம் தலைமை.

310 thoughts on “அதிகாரம் – 1 – குறள் – 1

  1. I’m writing on this topic these days, slotsite, but I have stopped writing because there is no reference material. Then I accidentally found your article. I can refer to a variety of materials, so I think the work I was preparing will work! Thank you for your efforts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *