பிறவிப் பெரும்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
விளக்கம்;-
பிறவி – கடல்.
பிறவிப் பெரும்கடல் – இறைவன் அடி {புணை – படகு} சேர்ந்தவர் பிறவிக்கடலை நீந்திவிடுவர். அதாவது இறைவனின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்கள் பிறவிக்கடலில் நீந்த முடியும்.
இறைவன் அடியைச் சேராதவர்கள் நீந்தமாட்டார்கள். எனவே, இறைவன் அடியைச் சேர்ந்தவர்கள் நீந்துவார்கள் என்று அந்தச் சொல்லிலேயே சொல்லிவிடுகிறார் திருவள்ளுவர். இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்கள் நீந்துவர் என்பது மறைமுகமாகக் கூறப்பட்டது.