வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
இந்தக் குறளிலும் சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் என்ற சொல் வருகிறது. இக்குறளும் மன வழிபாட்டையே வலியுறுத்துகிறது. இடும்பை என்றால் பிறவித்துன்பம் என்று பொருளாகும்.
பிறவித்துன்பங்கள்;-
- நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கின்ற துன்பம் – ஆதி ஆன்மீகம்.
- பிற உயிர்களாலே அல்லது மற்றவர்களாலே நமக்கு வரும் துன்பம் – ஆதி பவுதீகம்.
- தெய்வம் என்ற சொல் விதியையும் குறிக்கும். ஆகவே விதியினாலே வரும் துன்பம் – ஆதி தெய்வீகம்.
எந்த ஒரு பொருளையும் இறைவன் விரும்பவும் மாட்டார் வெறுக்கவும் மாட்டார். இது கடவுளுக்கு இயல்பு. ஆனால், மனிதனுக்கு அப்படியல்ல. பயிற்சியால் மட்டுமே வரும். துன்பம் வருகிறது என்றாலே ஒன்று விருப்பத்தினாலே வரும். இன்னொன்று வெறுப்பினாலே வரும். அந்த விருப்பத்திற்கு இடையூறு வந்தாலும் துன்பம். வெறுப்பு வளர்கின்ற போதும் துன்பம். எனவே பற்றில்லாமல் போகும் போதுதான் துன்பம் வராது. எதன் மீதும் பற்றில்லாத இறைவனை நாம் இடைவிடாமல் மனதால் தியானிக்கும்போது எந்த துன்பமும் இல்லை. ஏனென்றால், மனதால் நாம் ஒன்றை நினைக்கும்போது நாமும் அதுவாகவே மாறிவிடுவோம். இது தற்காலத்தில் நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மையும் கூட.
It was a good article, keep writing.