இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
நாம் செய்யும் செயலை இரண்டாகப் பிரிக்கலாம்.
- நல்வினை
- தீவினை
இந்த இரண்டையும் இருள்சேர் வினை என்கிறார் வள்ளுவர். இருள் என்றால் மயக்கம் என்று பொருள்.
மூன்று குணங்கள்;-
- காமம்
- கோபம்
- மயக்கம்
மனிதனுக்கு இம்மூன்று குணங்களும் உண்டு. ஆனால் காமம், கோபம் இரண்டையும்தான் வலியுறுத்திக் கூறுவார்கள். ஏனென்றால், இவை இரண்டும் உயிர்க்குணங்கள். இயல்பான குணங்கள். காமமும் கோபமும் வருவதற்கு காரணம் மயக்கம். இருளுக்குள் சென்றுவிட்டால் ஒன்றும் தெரியாது. எனவேதான் அதை மயக்கம் என்கிறார். அதைப்போலவே இந்த காமம் கோபம் என்ற மயக்கத்திற்குள்ளே வருகிறவர்களுக்கு எல்லாம் அடைபட்டு விடுகிறது.
இறைவன் பொருள்சேர் புகழ் உடையவர். அதாவது, உண்மைப்புகழ் உடையவர். எந்த ஒரு மனிதனையும் மிகைப்படுத்திப் புகழ்ந்து பேசக்கூடாது. அறிவிலார் தான் அப்படிப் புகழுவார்கள். புரிதல் – இடைவிடாது சொல்லுதல் {போற்றுதல்} என்று அர்த்தம். ஆகவே உண்மையான புகழையுடைய இறைவனை திரும்பத் திரும்பப் போற்றும்போது இந்த இருவினையும் நம்மைச்சேராது. இக்குறள் வார்த்தையாலே வழிபடுவதைக் கூறும் குறளாகும்.
Thank you for writing this article, I really enjoyed reading it