அதிகாரம் – 1 – குறள் – 8

இலக்கியம்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறஆழி நீந்தல் அரிது.

விளக்கம்;-

ஆழி – கடல்

கடல் போன்ற அறங்களை தனக்கு வடிவாகக் கொண்டதால் இறைவனை வள்ளுவர் அறவாழி அந்தணன் என்கிறார்.

தாள் – இறைவனது திருவடி.

சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் {போற்றுதல்}

பிற – பொருள், இன்பம்.

அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறவந்த வள்ளுவர் அறம் என்று அதைப்பிரித்து விட்டார். அறம் பற்றி நாம் இப்போது படித்துக்கொண்டிருக்கிறோம். எனவே பிற என்பது பொருளையும் இன்பத்தையும் குறிக்கும்.

நாம் பொருளையும் காமத்தையும் ஆனந்தமாக கடக்க வேண்டுமானால், அறக்கடலாகிய இறைவனை தொட்டால் தான் அந்த {பொருள், இன்பம்} ஆனந்தம் கிடைக்கும். மனிதனுக்கு எப்படி உடல் வடிவமாக கொடுக்கப்பட்டதோ அதைப்போலவே இறைவன் தர்மமே வடிவானவர். ஆகவே, தர்மத்தோடு முரண்படக்கூடாது. தர்மத்தோடு முரண்பட்டால் இறைவனோடு முரண்படுகிறோம் என்று அர்த்தம்.

தருமமாகிய கடலிலே நீந்த வேண்டுமானால் இறைவனின் திருவடியாகிய புணை {படகு} நமக்கு வேண்டும். அந்த படகு இல்லாமல் நீந்த முடியாது. எனவேதான் அதை நீந்தல் அரிது என்கிறார்.

அரிது – உறுதியாக இல்லை என்று பொருள்.

இந்தக் குறளும் மனவழிபாடு செய்யாவிட்டால் வரும் குற்றம் பற்றிக் கூறுகிறது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *