அதிகாரம் – 10 – குறள் – 92

இலக்கியம்

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:-

அகன் அமர்ந்து ஈதலின் நன்று – நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று, முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் – கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.

விருந்து என்ற அதிகாரத்தில் ஏற்கெனவே நாம் கற்றுக்கொண்டபடி விருந்து என்பது முதலில் இன்முகம் காட்டுவது; இன்சொல் பேசுவது; கொடுப்பது. இதில் எது முக்கியமானது என்று வள்ளுவர் எடுத்துக்கூறுகிறார்.

இக்குறளிலே கொடுப்பதை விடவும் முகமலர்ச்சியும், இன்சொல்லுமே முக்கியம் என்கிறார். ஏனென்றால் கொடுத்தல் என்பது பொருளில்தான் தங்கியிருக்கிறது. ஆனால் முகமலர்ச்சியும் இன்சொல்லும் நமக்குள்ளேத் தங்கியிருக்கிறது. பணமோ, பொருளோ நம்மிடம் இருந்தால் மட்டுமே கொடுக்கமுடியும். ஆனால் முகமலர்ச்சியும், இன்சொல்லும் நமக்குள்ளே தங்கியிருக்கிறது.

அறநெஞ்சம் உடையவர்களிடமிருந்து தான் முகமலர்ச்சியும் இன்சொல்லும் வரும். எனவேதான் கொடுத்தலை விடவும் இவைகள் உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.

மேலும் அறநெஞ்சம் எல்லாரிடத்திலும் இருப்பது அரிது ஆகவே பெறின் என்று ஐயக்கருத்து போட்டிருக்கிறார் வள்ளுவர்.

6 thoughts on “அதிகாரம் – 10 – குறள் – 92

  1. I am not sure the place you are getting your info,
    however good topic. I must spend some time learning much more or understanding
    more. Thank you for great info I used to be searching for this
    information for my mission.

  2. It is appropriate time to make some plans for the future and it’s time
    to be happy. I’ve read this post and if I could I
    wish to suggest you few interesting things or advice.
    Maybe you could write next articles referring to this article.
    I want to read more things about it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *