அதிகாரம் – 10 – குறள் – 94

இலக்கியம்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

விளக்கம்:-

யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு – எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு, துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும் – துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.

முதல் இரண்டு குறள்களிலும் கூறப்பட்ட இன்முகமும் இன்சொல்லும் உடையவர்களாக நாம் இருந்தால் என்ன பயன் கிடைக்கும்? இதற்கு விடையளிக்கிறது இக்குறள்.

நாம் பார்க்கிறவரகள் எல்லோரிடமும் இன்முகம் காட்டி இன்சொல்லையேப் பேசுவோமானால், நமது வாழ்வில் துன்பத்தைத் தருவதாகிய வறுமை இல்லாமல் போகும் என்கிறார் வள்ளுவர்.

நல்குரவு – வறுமை.

துவ்வாமை – அனுபவங்களைத் தரவேண்டிய பொறிகளுக்கு அனுபவம் இல்லாமல் போவதே வறுமை. ஆகவே வறுமையைத் துவ்வாமை என்றுச் சுட்டுகிறார்.

உள்ளத்திலிருந்து உண்மையாகவே அன்புகாட்டி நாம் அனைவரிடமும் பழகினால் எல்லோரும் நண்பர்களாகிவிடுவர்.

உறவு மூன்று வகைப்படும்.

  1. உறவு
  2. பகை
  3. நொதுமல் (விருப்புமில்லை வெறுப்புமில்லை)

இப்படி எல்லோரும் நண்பர்களாகிவிடுவதால் பகையும் நொதுமலும் இல்லாமல் போய்விடும். மேலும் உலகில் உள்ள அனைத்து நன்மையான அனுபவங்களும் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். நன்மையான அனுபவங்கள் என்றால் அது ருசியான உணவுப்பண்டமாக இருக்கலாம். நாம் காண விரும்பும் உலகின் உன்னதமான இடங்களாக இருக்கலாம். நல்லச் சொகுசுப்பயணமாக இருக்கலாம்.

7 thoughts on “அதிகாரம் – 10 – குறள் – 94

  1. That is really interesting, You’re an excessively professional blogger.
    I’ve joined your feed and look ahead to in quest of extra of your magnificent
    post. Additionally, I have shared your web site in my social networks

  2. I’ve been exploring for a bit for any high-quality articles or blog posts in this sort of
    house . Exploring in Yahoo I ultimately
    stumbled upon this web site. Reading this information So i am happy to exhibit
    that I have an incredibly good uncanny feeling I found out just what I needed.
    I so much indubitably will make sure to don?t forget this web
    site and give it a glance on a continuing basis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *