சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
விளக்கம்:-
சிறுமையுள் நீங்கிய இன்சொல் – பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல், மறுமையும் இம்மையும் இன்பம் தரும் – ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
கடந்த குறளில் பிறருக்கு நாம் கூறும் சொல் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இக்குறளில் அந்தச் சொல்லின் பொருளும் கூட இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இம்மை, மறுமை என்று கூறுவதே மரபு. ஆனால் மறுமையை முதலில் கூறுகிறார். ஏனென்றால் தொல்காப்பிய இலக்கணமுறையான அடுக்குமுறைப்படி உயர்வானதை முதலில் கூறவேண்டும். மறுமை இன்பமே இம்மை இன்பத்தை விட உயர்ந்தது. ஆகவே மறுமையை முதலில் கூறினார் என்று பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
இம்மை இன்பம் எதுவென்றால் நாம் அனைவரிடமும் இன்சொல் பேசி பணிவுடன் நடந்துகொண்டால் உலகம் நம் வசமாகிவிடும். அனைத்து உலக நன்மைகளும் கிடைத்துவிடும். அதையே இம்மை இன்பம் என்று கூறுகிறார்.
இவ்விரண்டு குறள்களிலும் (இம்மை, மறுமை) இருமைப்பயன் சேர்த்துக் கூறப்பட்டது.
I know this website presents quality based content and extra stuff, is there any other site which provides such things in quality?