அதிகாரம் – 11 – குறள் – 102

இலக்கியம்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம்:-

காலத்தினால் செய்த நன்றி – ஒருவனுக்கு இறுதி வந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம், சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது – தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.

நன்றி – உபகாரம்.

ஒருவர் உயிராபத்தில் இருக்கும்போது நாம் செய்கிற உதவி காலத்தில் செய்த உதவியாகும். அந்த உதவி எத்தனைச் சிறிதாயிருந்தாலும் அந்தக் காலத்தை நோக்கும்போது இவ்வுலகத்தை விட மிகவும் பெரியது.

அதேபோல நமக்கு முன்பாக நிறைய மக்கள் தேவையோடு இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் தக்கச் சமயத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

‘என்று தருங்கொல்?’ எனவேண்டாம் – நின்று

தளரா வளர்தொங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

இது அவ்வைப்பாட்டிப் பாடிய மூதுரையாகும்.

தென்னைமரத்திற்கு வேரில் தான் தண்ணீர் பாய்ச்சுகிறோம். ஆனால் அந்த வேரினால் நமக்குப் பயனில்லை. உயரமாக வளர்ந்த மரத்திலிருந்துதான் தேங்காய், இளநீர் போன்றவை கிடைக்கின்றன. இதுபோலவே தக்கச் சமயத்தில் பிறருக்கு நாம் செய்யும் உதவி மிகப்பெரிய விதத்தில் நமக்கு நிச்சயம் திரும்பி வரும்.

ஆகவேதான் உதவிகள் வரிசையில் இரண்டாவதாக காலத்தினால் செய்த உதவியை வைக்கிறார்.

காலத்தில் செய்த உதவி என்றே வரவேண்டும். இல் என்ற உருபு ஆல் (காலத்தினால்) என்று வந்தபடியால் இது வேற்றுமை மயக்கம்.

2 thoughts on “அதிகாரம் – 11 – குறள் – 102

  1. I have been browsing online more than 4 hours today,
    yet I never found any interesting article like yours.

    It is pretty worth enough for me. In my view,
    if all website owners and bloggers made good content
    as you did, the web will be a lot more useful than ever before.|
    I could not refrain from commenting.
    Perfectly written!|
    I’ll immediately grab your rss as I can not to find your email subscription link or newsletter
    service. Do you have any? Please allow me recognise
    in order that I may just subscribe. Thanks. |
    It’s the best time to make some plans for the future and
    it is time to be happy. I’ve read this post and
    if I could I wish to suggest you some interesting things or suggestions.

    Maybe you can write next articles referring to this article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *