நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம்:-
நன்றி மறப்பது நன்று அன்று – ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று – அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன்.
ஒரே மனிதர் நன்றிக்கு உரிய ஒன்றையும் செய்வார். நன்று அல்லாதவற்றையும் செய்வார். எனவே ஒருவர் செய்த நன்றியை எப்போதும் நினைத்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நன்றி அல்லாததை உடனடியாக மறந்துவிட வேண்டும்.
இப்படி நன்றியுணர்வுடன் இருப்பதையும் நன்றல்லாததை உடனடியாக மறப்பதையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அந்தக் குணத்தில் நிலைத்திருக்கவும் வேண்டும்.
நன்றல்லாததை உடனடியாக மறப்பதற்கு என்ன வழி என்று அடுத்தக் குறளிலே தெளிவுபடுத்துவார் வள்ளுவர்.