எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
விளக்கம்:-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் – பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை – ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.
நன்றி மறந்தவருக்கு எந்த வகையிலும் உய்வில்லை. இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு உய்வே இல்லை.
பெரிய அறங்களைச் சிதைத்தல் என்றால் என்ன?
- பசுவின் முலையை அறுத்தல்.
- பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தல்.
- அறிஞர்களைக் கொல்லுதல்.
இத்தகையப் பாவங்களைச் செய்தவர்களுக்குக் கூட பிராயச்சித்தம் உண்டு. அதைப்பற்றி நமது அறநூல்கள் கூறுகின்றன. ஆனால் நன்றியை மறந்தவருக்குப் பிராயச்சித்தம் இல்லை. அதைப்பற்றி எந்த நூல்களும் பேசவில்லை.
இக்குறள் செய்த நன்றியை மறந்தால் நடக்கும் கொடுமைப் பற்றிக் கூறுகிறது.