அதிகாரம் – 12 – குறள் – 112

இலக்கியம்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து.

விளக்கம்:-

செப்பம் உடையவன் ஆக்கம் – நடுவு நிலைமையை உடையவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.

செப்பம் – நடுவுநிலைமை.

ஏமாப்பு – பலம்.

நடுவுநிலைமை தவறாமல் சேர்த்த செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் பலத்தைக் கொடுக்கும். அறநெறி தவறிச் சேர்த்தச் செல்வம் அழிவையே தரும்.

எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து என்றே இக்குறளை வாசிக்க வேண்டும். ம் என்ற உம்மை மறைந்து நிற்கிறது. எப்படியென்றால் நடுவுநிலைமையோடுச் சேர்த்தச் செல்வம் சந்ததிக்குப் பலம் தரும் நமக்குத் தராதா? என்ற கேள்வி வருகிறது. அறவழியில் நடுவுநிலைமையோடுச் சேர்த்தச் செல்வம் நமது மரணம் வரைக்கும் வலிமை தருவதோடு நமது சந்ததிக்கும் வலிமையைப் பலத்தைத் தரும். இதைக் குறிக்கவே இங்கே உம்மை மறைந்து நிற்கிறது.

நாம் இறந்த பின்பும் நமது பிள்ளைகள் எச்சமாக எஞ்சி நிற்பதால் பிள்ளைகளை எச்சம் என்ற சொல்லில் குறிக்கிறார் வள்ளுவர்.

3 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 112

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *