அதிகாரம் – 12 – குறள் – 113

இலக்கியம்

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

விளக்கம்:-

நன்றே தரினும் – தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் – நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.

திருக்குறளிலே ஆக்கம் என்ற சொல் சில இடங்களில் செல்வம் என்ற பொருளில் வரும். இக்குறளிலே ஆக்கம் என்பது செல்வமாகும். நடுவுநிலைமை தவறி வந்தச் செல்வம் நன்மையைத் தந்தாலும் கூட அதை நஞ்சென்று கருதி உடனே ஒதுக்கி விட வேண்டும். இப்படி வரும் செல்வமானது நமது வீட்டையே அழித்துவிடும்.

அன்றே – அப்பொழுதே.

நன்றே தரினும் என்பது ஐயக்கருத்தாகும். ஆகவே நடுவுநிலைமை தவறி வந்தச் செல்வம் நன்மையைத் தராது என்றே பொருளாகும்.

நடுவு இகத்தலான் என்பது இகந்து என்று சுருங்கி வந்துள்ளது. இது சுருக்க விகாரமாகும்.

இவ்விரண்டு குறள்களும் முறையே நடுவுநிலைமையில் வந்தச் செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் நன்மை பயக்கும் என்றும் நடுவுநிலைமை தவறி வந்தச் செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் தீமையைத் தரும் என்று கூறுகின்றன.

6 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 113

 1. Wonderful goods from you, man. I have understand your stuff previous to and you are just too magnificent.
  I actually like what you have acquired here, really like
  what you’re saying and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it sensible.

  I can’t wait to read much more from you. This is actually a great website.

 2. What’s Going down i’m new to this, I stumbled upon this I’ve found It
  positively helpful and it has helped me out loads.

  I am hoping to contribute & help other customers like its helped me.
  Good job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *