அதிகாரம் – 12 – குறள் – 114

இலக்கியம்

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

விளக்கம்:-

தக்கார் தகவிலர் என்பது – இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம், அவரவர் எச்சத்தால் காணப்படும் – அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.

தக்கார் – நடுவு நிலைமை என்னும் தகுதியுடையவர்.

தகவிலர் – நடுவு நிலைமை என்னும் தகுதியில்லாதவர்.

எச்சம் – சந்ததி (பிள்ளைகள்).

இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றால், இவர்களது சந்ததியைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அறவழியில் நிற்கிற பிள்ளைகளென்றால் அவர்களது பெற்றோரும் நல்லவர்களே. அறவழியில் நில்லாத பிள்ளைகளென்றால், அவர்களது பெற்றோரும் பாவம் செய்தவர்களே.

நன்மக்களாக இருக்கிறார்கள் என்பதை வைத்தும் நன்மக்களாக இல்லையென்பதை வைத்தும் இவர்களது பெற்றோர் தக்கவர்களா தகவிலர்களா என்பதைத் தீர்மானிக்கலாம்.

பிள்ளைகளைக் கொண்டே பெற்றோர்களை தராசுத் தட்டில் போட்டுப் பார்த்துவிடலாம். ஆகவே நாம் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்த்து தக்காராக மாற முயற்சிக்க வேண்டும்.

12 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 114

  1. Wow that was strange. I just wrote an extremely long comment but
    after I clicked submit my comment didn’t appear. Grrrr… well I’m not writing all that over again. Regardless, just wanted to say wonderful
    blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *