அதிகாரம் – 12 – குறள் – 117

இலக்கியம்

கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

விளக்கம்:-

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை, கெடுவாக வையாது உலகம் – வறுமை என்று கருதார் உயர்ந்தோர்.

நடுவு நிலைமையோடு இருந்தும் வறுமை வந்தால் அதற்குத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்று இக்குறளில் பார்க்கலாம்.

ஊழின் காரணமாக வறுமை வந்தால் கவலைப்படக்கூடாது. ஏனென்றால், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். எனவே உயர்ந்தவர்கள் நடுவுநிலைமையோடு இருப்பவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களின் வறுமையைச் செல்வம் என்று கருதுவர்.

உதாரணம்:-

காமராசர், கக்கன், தேவநேயப்பாவாணர் போன்றோர். இவர்களைப் பற்றி இப்பொழுது படித்தாலும் நமக்கு அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வருகிறதே தவிர இவர்கள் எத்தனைச் செல்வமுடையவர்களாக இருந்தார்கள் என்று நாம் நினைப்பதில்லை.

அதுபோலவே, களவு செய்வதன் மூலமாக வரும் செல்வம் வறுமையாகவேக் கருதப்படும்.

கெடுதல் என்றச் சொல்லே கெடுவாக என்று குறளில் வருகிறது. இங்கே ‘கெடு’ என்பது பகுதி. ‘தல்’ என்பது விகுதி. ஆகவே கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர்.

வறுமை செல்வம் என்ற பொருளில் வருகிறது. ஆகவே, இதுக் குறிப்பெச்சம்.

மேற்கண்ட மூன்று குறள்களிலும், கேடும் பெருக்கமும் நடுவுநிலைமை தவறுவதால் வருவதில்லை பழவினையால் வருவது என்றும், நடுவுநிலைமை தவறுவதைப் பற்றி இவ்வளவு படித்த பின்னரும் நடுவுநிலைமை தவறி ஆக்கம் செய்துவிடலாம் என்று நினைப்பதே நமக்குத் தீங்கு வருவதற்கான உற்பாதம் என்பதையும், நடுவுநிலைமையோடு வாழ்பவர்கள் வறுமையில் இருந்தாலும் அது கேடு அல்ல என்பதும் கூறப்பட்டன.

6 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 117

  1. I like the valuable info you provide for your articles.

    I will bookmark your blog and take a look at again right here frequently.
    I am fairly sure I’ll be informed a lot of new stuff right right here!
    Best of luck for the following!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *