அதிகாரம் – 12 – குறள் – 118

இலக்கியம்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்:-

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் – முன்னே தான் சமமாக நின்றுபின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல, அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

கோல் – தராசு. தராசின் முள் சமனாக நின்ற பின்னரே எடைக்கற்களையும் பொருளையும் வைத்து நிறுக்க வேண்டும். இதில் தராசுக்கோல் முதலாவது தன்னைச் சமன் செய்த பின்னரே சீர்தூக்கிப் பார்க்கும். அதுபோலவே வழக்குத் தீர்ப்பவர்கள் முதலாவது தன்னைச் சமன் செய்து கொள்ள வேண்டும். பின்பே வழக்கைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்புச் சொல்லவேண்டும். இது பிள்ளைகள் விடயத்திலும் மாமியார், மருமகள், கணவர் விடயத்திலும் பொருந்தும். வழக்கு என்று வந்துவிட்டால் அங்கே தகப்பன், கணவர் என்று ஒருசார்பு நிலை இல்லாமல் நீதிபதியாக மாறி நடுவுநிலைமை தவறாமல் இருக்க வேண்டும்.

இக்குறளிலே தராசு என்பது சான்றோர்க்கு உவமையாகச் சொல்லப்பட்டது. சமன் செய்தல், சீர்தூக்குதல் என்ற அடைமொழி தராசுக்கோலாகிய உவமைக்குச் சொல்லப்பட்டது.

சான்றோர் என்ற பொருளுக்குச் சொல்லப்பட்ட அடைமொழி என்னவென்றால், அமைதல், கோடாமை.

அமைதல் – இலக்கணங்களுக்கு ஏற்ப அமைதல்.

கோடாமை – ஒருசார்பு நிலையாக இல்லாமல் நடுவுநிலைமையோடு இருத்தல்.

சமன் செய்தல், சீர்தூக்குதல் என்ற அடைமொழிகள் சான்றோருக்கும்; அமைதல், கோடாமை என்ற அடைமொழிகள் தராசுக்கோலுக்கும் பொருந்தும் என்று பரிமேலழகர் கூறுகிறார்.

சீர்தூக்குதல் என்றால் என்ன?

விசாரணை என்று வந்தால் கேள்வி கேட்டு விடை சொல்ல வைத்தால் நாம் உண்மையை மட்டுமே கூற வேண்டும். இங்கே பொய் கூறுவது நம்மைச் சிக்கலில் மாட்டிவிடும். உண்மையை மட்டுமே கூறும்போது தப்பித்துவிடலாம். உண்மையான பதிலைக் கூறும் முறையால் உண்மையை உணரலாம்.

விசாரணையில் பிழையைக் கண்டு பிடித்துவிட்டால் அங்கே பகை, நொதுமல், நட்பு பாராமல் நடுவுநிலைமையோடு தீர்ப்புக் கூறவேண்டும்.

7 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 118

  1. With havin so much content and articles do you ever
    run into any problems of plagorism or copyright infringement?
    My blog has a lot of completely unique content I’ve either authored myself or outsourced but
    it looks like a lot of it is popping it up all over the web without my permission. Do you know any ways
    to help stop content from being ripped off? I’d genuinely appreciate it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *