அதிகாரம் – 12 – குறள் – 119

இலக்கியம்

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

விளக்கம்:-

செப்பம் சொற்கோட்டம் இல்லது – நடுவுநிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் – அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.

கடந்த குறளிலே கூறிய கருத்தே இக்குறளிலும் வருகிறது. வீட்டிலோ அல்லது நீதிமன்றத்திலோ வழக்கு என்று வந்துவிட்டால் நீதிபதி தனது தீரப்பை உறுதியாக் கூறவேண்டும். எந்த வார்த்தையையும் புரட்டாமல் சொல் தவறாமல் கூறவேண்டும்.

மனதிலே புரட்டு இருந்தால் சொல்லிலும் புரட்டு வந்துவிடும். முறைமையினாலே வரையறுத்துச் சொல்லுதல் நடுவுநிலைமையாகும்.

உதாரணம்:-

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னர் நீதி தவறித் தீர்ப்புக் கூறியதால் தனது உயிரையே விட்டார். இதுவே சான்றோர்க்கு அழகு. நமது தமிழினத்தின் பெருமையும் கூட.

மனதிலே நடுவுநிலைமையோடு இருந்தால் வெளிப்படும் சொல்லும் நடுவுநிலைமையோடு இருக்கும். இதையேச் செப்பம் என்கிறார் வள்ளுவர்.

4 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 119

  1. Your writing is perfect and complete. baccarat online However, I think it will be more wonderful if your post includes additional topics that I am thinking of. I have a lot of posts on my site similar to your topic. Would you like to visit once?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *