அதிகாரம் – 13 – குறள் – 123

இலக்கியம்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்

தாற்றின் அடங்கப் பெறின்.

விளக்கம்:-

அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – ‘அடங்குதலே நமக்கு அறிவாவது’ என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.

அடக்கம் என்பது எல்லா அறங்களுக்கான ஆணி வேராகும். மனம், மொழி, மெய்கள் மூன்றனையும் தமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய அடங்குதலே நமக்குத் துணையாகிய அறிவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதுவே நம்மை நெறிப்படுத்தும் (வழிப்படுத்தும்).

ஆற்றின்(ஆறு) – வழி, நெறி.

இந்த அடக்கம் உள்ளவர்கள் மீது உயர்ந்தவர்களுக்கு மதிப்பு ஏற்படும். நம்முடையச் செறிவைக் கண்டு நமக்கான மதிப்பைக் கற்றவர்கள் தருவார்கள்.

இல்லறவியலில் இக்குறள் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இல்வாழ்வானுக்கு இந்த அறம் கூறப்படுகிறதே தவிர துறவிகளுக்குக் கூறப்படுவதில்லை. எனவே, இல்வாழ்வான் மனம், மொழி, மெய்கள் மூன்றனையும் தனதுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே அடக்கம். அதுவே நெறியாகும்.

கற்றவர்களாகிய பெரியோர் மனதில் நமக்கு ஒரு இடம் கிடைப்பதே புகழ். பிரபலமாவதற்குப் பெயர் புகழல்ல.

2 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 123

  1. My spouse and I stumbled over here different web address and thought I should check things out.

    I like what I see so now i’m following you. Look forward to looking into your web page repeatedly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *