அதிகாரம் – 13 – குறள் – 125

இலக்கியம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

விளக்கம்:-

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் – பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து – அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறோரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து.

மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்கும் அடக்கம், பணிவு என்பது மிகவும் அவசியம். பணிவே அழகு தரும். ஆனால், பெருமிதத்துக்கு உரிய காரணங்கள் உள்ளவர் அடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் அடங்க வேண்டும் என்கிறார். ஏன்? என்று விரிவாகப் பார்க்கலாம்.

பெருமிதம் வரக் காரணங்கள்:-

 1. கல்வி
 2. குடிப்பிறப்பு
 3. செல்வம்

இதில் முறைப்படிக் கற்றக் கல்வியினால் வருகின்றப் பெருமிதத்தைக் கல்வி தருகின்ற அறிவே அடக்கிவிடும். குடிப்பிறப்பால் வருகின்றப் பெருமிதத்தை அந்தக் குடிப்பிறப்புத் தருகின்ற பண்பு அடக்கிவிடும். ஆனால், செல்வம் பெருமிதத்தை அடக்காது வளரச்செய்யும். ஆகவேதான் மற்ற இருவரைக் காட்டிலும் செல்வந்தர் அடங்க வேண்டும் என்று இக்குறளில் அழுத்திக் கூறுகிறார். இம்மூன்றுப் பேருக்கும் அடக்கம் பொதுவானது ஆயினும் செல்வந்தருக்குச் சிறப்பாகக் கூறுகிறார்.

செல்வத்தகைத்து என்று இருக்க வேண்டும் செல்வம் தகைத்து என்று மெலிந்து நின்றது என்று பரிமேலழகர் கூறுகிறார்.

இந்த ஐந்து குறள்களிலும் பொதுவான அடக்கத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

33 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 125

 1. Its like you read my mind! You seem to know a lot
  about this, like you wrote the book in it or something.

  I think that you could do with some pics to drive
  the message home a little bit, but instead of that, this is great blog.
  A great read. I will definitely be back.

 2. An outstanding share! I’ve just forwarded this onto a friend who had been doing a little research
  on this. And he actually bought me breakfast due to the fact that I discovered it for him…
  lol. So allow me to reword this…. Thank YOU for the meal!!
  But yeah, thanks for spending the time to discuss this topic here on your site.

 3. I was recommended this web site via my cousin.
  I’m now not positive whether or not this publish is written via him as nobody else understand such detailed
  about my trouble. You are incredible! Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *