அதிகாரம் – 13 – குறள் – 127

இலக்கியம்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

விளக்கம்:-

யாகாவாராயினும் நா காக்க – தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் – அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு நாமே அதிகாரியாக இருக்க வேண்டும். வார்த்தைகளைப் பேசுகின்ற போது அதன் பொருளும் சொல்லும் நமதுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல மேடைப் பேச்சிற்கும் பொருந்தும். வார்த்தைகள் நமக்கு அதிகாரியாக இருந்தால் அது துன்பத்தையே தரும்.

யா என்னும் சொல்லின் இலக்கண விளக்கம்:-

உயர்திணை, அஃறிணை இவற்றில் யா என்னும் சொல் அஃறிணையாகும். யாது என்றால் ஒருமை. யா என்றால் பன்மையாகும். யா என்றால் எது? என்றக் கேள்விச்சொல்லாகவும் வரும். எனவே இது வினாச்சொல். இப்படி ‘யா’ என்னும் ஒரு சொல் மூன்று இலக்கணங்களை உள்ளடக்கி நிற்கிறது.

எதைக் காப்பாற்றா விட்டாலும் நாவைக் காக்க வேண்டும் என்ற பொருளில் இங்கே யா என்னும் சொல் வருகிறது. இதனை எஞ்சாமை – மிச்சமிருப்பது என்று பரிமேலழகர் உரையெழுதுகிறார்.

எதையும் காப்பாற்றாமல் விட்டாலும் நாவைக் காக்க வேண்டும். இதுவே குறளின் பொருள். இங்கே ‘ம்’ என்னும் முற்றும்மை மறைந்து நிற்கிறது.

சொற்குற்றம் – சொல்லின்கண் தோன்றும் குற்றம்.

சோகாப்பர் – சோகத்தைக் காப்பார்கள். இந்தச் சோகாப்பர் என்னும் சொல் தமிழ் இலக்கணத்திற்குள் அமைந்தச் சொல்லாகும்.

27 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 127

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *