அதிகாரம் – 13 – குறள் – 129

இலக்கியம்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

விளக்கம்:-

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் – ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது – அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

முதல் ஐந்து குறள்களும் பொதுவான அடக்கம் பற்றிக் கூறின. ஆறாவது குறள் மெய்யடக்கம் பற்றிக் கூறியது. வார்த்தை அடக்கத்திற்கு மூன்று குறள்களை திருவள்ளுவர் ஏன் வைத்தார்? என்றால் இது மிகவும் முக்கியம் என்று நமக்கு உணர்த்துவதற்காகவே.

ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் உடம்பிலே இருந்தாலும் மனதில் உடனடியாக ஆறிவிடும். ஆனால் ஒருவன் நாவினாலே வெவ்வுரை (கடுஞ்சொல்) பேசினால் மனதில் ஆறாது வடுவாகிவிடும்.

புண் – தீயினால் சுடுவது.

வடு (தழும்பு) – ஆறாது அடையாளமாக மாறிவிடும்.

தீயும் (கடுஞ்சொல்) வெவ்வுரையும் சுடுதல் என்னும் ஒரே தன்மையை உடையது. சுடுதல் என்பது இதில் உள்ள ஒற்றுமையாகும். ஆனால் தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். வார்த்தையால் சுட்ட புண் ஆறாது வடுவாகிவிடும். இது இரண்டிற்கும் உள்ள வேற்றுமையாகும். ஆகவே இது குறிப்பினால் வந்த வேற்றுமை அலங்காரம் என்று பரிமேலழகர் உரையெழுதுகிறார்.

இம்மூன்று குறள்களும் மொழி அடக்கம் பற்றிக் கூறின.

8 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 129

  1. Thank you, I have recently been looking for information approximately
    this subject for ages and yours is the greatest I have found out so far.
    But, what in regards to the bottom line? Are you certain concerning the supply?

  2. Very nice post. I just stumbled upon your blog and wished to say
    that I have really enjoyed surfing around your blog posts.
    In any case I’ll be subscribing to your rss feed and
    I hope you write again very soon!

  3. Pretty section of content. I simply stumbled upon your site and in accession capital
    to assert that I get actually loved account your weblog posts.
    Anyway I will be subscribing to your feeds and even I achievement
    you get entry to constantly quickly.

  4. Great blog here! Also your web site rather a lot up very
    fast! What web host are you using? Can I am getting your
    associate link for your host? I desire my website loaded up as
    fast as yours lol

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *