அதிகாரம் – 14 – குறள் – 132

இலக்கியம்

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை.

விளக்கம்:-

ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க – ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே – அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ‘இவற்றுள் இருமைக்கு துணையாவது யாது?’ என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.

உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது என்று முதல் குறளிலே படித்தோம். அப்படி உயர்வான ஒழுக்கத்தைப் பேணியும் வருந்தியும் கூட காக்க வேண்டும். எப்படி வீட்டிலே விலையுயர்ந்த பொருட்களை கடினப்பட்டாலும் காத்துக் கொள்கிறோமோ அதுபோலவே மிகவும் கடினப்பட்டாவது ஒழுக்கத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். சிறப்பான ஒன்றை இவ்வுலகில் காத்துக் கொள்வது மிகவும் கடினமே.

பரிந்து – வருந்தியும் காத்தல்.

ஓம்பி – ஒன்றானும் அழியாமல் காத்தல்.

இருமை – இம்மை, மறுமை. இரண்டுக்கும் துணையாவது யாது? என்று மனத்தை ஒடுக்கி ஆராய்ந்தாலும் அதனது முடிவு ஒழுக்கமே.

பரிந்தும் ஓம்பியும் ஒழுக்கத்தைக் காக்க வேண்டும் என்று குறளிலே இருக்க வேண்டும். இங்கே (ம்) உம்மை மறைந்து நிற்கிறது. அதை நாம் வருவித்துக் கொள்ள வேண்டும்.

இவ்விரண்டு குறள்களும் ஒழுக்கத்தின் சிறப்பினைக் கூறுகின்றன.

7 thoughts on “அதிகாரம் – 14 – குறள் – 132

  1. Amazing things here. I am very glad to peer your article.
    Thank you a lot and I’m having a look ahead to touch you.
    Will you please drop me a e-mail?

  2. Hello! I know this is kinda off topic but I’d figured I’d ask.
    Would you be interested in exchanging links or maybe guest authoring a blog post or vice-versa?
    My blog covers a lot of the same subjects as
    yours and I believe we could greatly benefit from each other.
    If you are interested feel free to send me an email. I look forward to hearing from you!
    Terrific blog by the way!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *