ஒழுக்க முடைமை குடைமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
விளக்கம்:-
ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
வருணம் என்ற நான்கு பிரிவுகள் பற்றி முதல் குறளிலே படித்தோம்.
உற்பத்தியாளர் – சூத்திரர்
விநியோகஸ்தர் – வைசியர்
நிர்வாகி – சத்திரியர்
கல்வியாளர் – பிராமணர்
இந்த நான்கு வருணங்களுக்குள்ளும் குலப் பிரிவுகள் உண்டு. அவர்கள் செய்கின்ற தொழில்களின் அடிப்படையில் பிரிவுகள் ஏற்படுகிறது. உற்பத்தியாளர்கள் என்றால் விவசாயிகள், மண்பாண்டம் முனைவோர் இப்படி பல பிரிவுகள் உண்டு. விநியோகஸ்தர்களிலே தங்க நகை வியாபாரி, மீன் வியாபாரி, காய்கறிகள் விற்பனை செய்பவர் இப்படி பல பிரிவுகள் உண்டு. அந்தந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கென்று ஒரு இயல்பு இருக்கும். இங்கே நாம் சமநிலையைப் பற்றிப் பேசினால் அந்த இயல்பு பொருந்தாது.
எனவே ஒரே வருணத்துக்குள்ளே பல குலப்பிரிவுகள் இருக்கின்றன. இந்தக் குலப்பிரிவில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று அதனதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
வருணப்பிரிவு என்பது ஒரு மனிதனுடைய பிறவி இயல்புக்கேற்பப் பிரிக்கப்படுதல். குலப்பிரிவு என்பது தொழில் சார்ந்து அமைந்தது.
உதாரணத்திற்கு விநியோகஸ்தர் என்ற வருணப்பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் வருணத்துக்குரிய ஒழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்ந்தால் அந்த வருணத்துக்குள்ளே உயர்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள். மற்றபடி அவர் வேறு ஒரு வருணத்தைச் சார்ந்தவராக மாற முடியாது. ஏனெனில் வருணம் என்பது ஒரு பிறவி இயல்பு ஆகும். இன்றைக்கும் பல பொறியியல் பட்டதாரிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பியதற்கு அவர்களுக்குள்ளே இருந்த உற்பத்தியாளர் என்று வருணத்தின் இயல்பே ஆகும். அதே நேரம் தனது வருணத்துக்குரிய ஒழுக்கங்களைக் கடைபிடிக்காவிட்டால் தாழ்ந்த வருணத்துள் ஒருவனாகக் கருதப்படுவார்கள். இந்தக் கருத்தையே பரிமேலழகர் தனது உரைக்குறிப்பில் விளக்கியிருக்கிறார்.
ஆகவே எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் ஒழுக்கமுடையவராக இருந்தால் அவர் உயர்ந்தவர். ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அவர் எந்தக் குலத்தை வருணத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் தாழ்ந்தவர்.
ஒழுக்கத்தினால் வரும் உயர்வை விட ஒழுக்கம் இல்லாததால் வரும் குற்றம் தாழ்வானது. நாம் ஒழுக்கத்தோடு இருந்தால் அந்த வருணத்துக்குரிய குலத்துக்குரிய உயர்குலப் பெருமை உடனேயே வரும். ஆனால் அவ்வொழுக்கத்தில் தவறினோமானால் உடனேயே இழிந்த பிறப்பாகிவிடுவோம்.
ஒழுக்கம் என்பது காரணம். இதனால் வருகின்ற பயன் உயர்குலப்பெருமை. இழுக்கம் என்பது காரணம் இதன் பயன் இழிந்த பிறப்பு.
ampicillin 100
Very rapidly this web page will be famous among all blogging visitors, due to it’s fastidious
content
Today, I went to the beach with my children. I found a sea shell
and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed.
There was a hermit crab inside and it pinched her ear.
She never wants to go back! LoL I know this is
completely off topic but I had to tell someone!