அதிகாரம் – 14 – குறள் – 137

இலக்கியம்

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவ ரெய்தாப் பழி.

விளக்கம்:-

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் – எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் – அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.

ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் அந்த ஒழுக்கத்தாலே உயர்வை அடைவார். அப்படியானால் ஒழுக்கந்தவறி நடந்தால் என்ன நிலை என்ற கேள்வி வருகிறது. ஒழுக்கந்தவறினால் உயர்வும் கிடைக்காது அதே நேரம் தாழ்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர்.

தேவை இல்லாத தவறை ஒருவர் செய்கிறாரென்றால் இந்த உலகம் இல்லாத ஒரு தவறையும் அவர் செய்திருப்பார் என்று நம்பும். இது உலக இயல்பு. இப்படி இல்லாத பழியும் ஒரு தவறின் காரணமாக ஏற்றப்படும். இதையே எய்தாப்பழி என்கிறார் வள்ளுவர். ஆகவே மிகவும் கவனமாக ஒழுக்கத்திலே நிலைத்திருக்க வேண்டும் என்று இக்குறள் வலியுறுத்துகிறது.

இந்த ஐந்து குறள்களும் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதால் வரும் உயர்வையும் கடைபிடிக்காவிட்டால் வரும் தாழ்வையும் கூறுகின்றன.

6 thoughts on “அதிகாரம் – 14 – குறள் – 137

  1. It is appropriate time to make a few plans for the longer term and
    it’s time to be happy. I have read this post and if I may I desire to counsel you some fascinating
    issues or suggestions. Perhaps you can write next articles relating to this article.
    I want to learn even more issues about it!

  2. I was wondering if you ever thought of changing the layout of your
    website? Its very well written; I love what youve got to say.

    But maybe you could a little more in the way of content so people could connect with it better.

    Youve got an awful lot of text for only having one or two pictures.
    Maybe you could space it out better?

  3. Have you ever considered about adding a little bit more than just your articles?

    I mean, what you say is valuable and everything.
    However imagine if you added some great graphics or
    video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and clips,
    this blog could undeniably be one of the best in its field.
    Fantastic blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *