விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.
விளக்கம்;-
விண்ணின்று பொய்ப்பின் – தேவைப்படும் காலத்தில் மழை பெய்ய வேண்டும்.
மழை வேண்டிய காலத்தில் பெய்யாது பொய்த்தால் பசி நிலைத்துவிடும். இந்த உலகம் நீராகிய கடலால் சூழப்பட்டது ஆயினும் மழை அவசியம். எனவே மழை பெய்யாவிட்டால், இந்த அகன்ற உலகத்தில் பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும்.