ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்;-
மழை தானும் உணவாகி உணவுகளையும் உண்டாக்கும். இந்த உலகம் கடலால் சூழப்பட்டதாயினும் மழை இல்லாவிட்டால் உயிர்கள் பசியால் வாடும் என்று மேற்கண்ட குறள்களில் சொன்னார்.
அப்படியானால், உழுது விதைத்து உணவை உற்பத்தி செய்து உண்ண முடியாதா? என்று அடுத்த கேள்வி வருகிறது. அதற்கு விடை கூறுகிறார் வள்ளுவர்.
மழை பெய்யாவிட்டால் உழவர்கள் நிலத்தை உழாமல் விட்டுவிடுவார்கள். எனவே மழை தானும் உணவாகாது. உண்டாகிற உணவையும் உண்டாக்கமல் விட்டுவிடும்.
உழவர் ஏரின் உழாஅர் – உழவர் ஏரான் உழுதலைச் செய்யார். – அந்தக் காலத்தில் ஆன் விகுதி பயன்பாட்டில் இருந்தது. ‘ஏரால்’ என்று படிக்க வேண்டும்.
புயல் – மேகம், காற்று
இக்குறளிலே புயல் என்ற சொல் மறைமுகமாக மழை என்ற பொருளிலே வருகிறது.
வாரி – வருவாய்.
குன்றக்கால் – குன்றியக்கால்.
பாடலிலே ஓசைநயம், எதுகை, மோனை நயம் வரவேண்டும் என்பதற்காக இது போன்ற சொற்களை பயன்படுத்த ஆசிரியருக்கு அனுமதி உண்டு.
Nice post, worth reading. Thankful