அதிகாரம் – 2 குறள் – 19

இலக்கியம்

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.

விளக்கம்;-

தானம் – இல்லறம்

தவம் – துறவறம்

வானம் வழங்காதெனின் – மழை பெய்யாதாயின்

மழை பெய்யாவிட்டால் இல்லறமும் துறவறமும் நிலைக்காது என்கிறார். அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை. மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை.

தானம் என்பதின் விளக்கம்;-

1 அறவழியில் வந்த பொருளை

2. தக்கார்க்கு

3. உவகையோடு

4. கொடுக்க வேண்டும்.

இந்த நான்கும் சேர்ந்ததுதான் தானம்.

தவம் என்பதின் விளக்கம்;-

மனதை ஐம்பொறிகளின் வழியாகச் செலுத்தாமல் அடக்குதல் அதன் பொருட்டு உண்டி (உணவு) சுருக்குதல் முதலான காரியங்களைச் செய்தல்.

தங்கா – பன்மை

தங்காது – ஒருமை

இல்லறம் இல்லாவிட்டால் துறவறம் இல்லை. எனவே இல்லறம் (தானம்) என்பது (பெரும்பான்மை) பன்மையாகிறது. எனவே தானம் என்று முதலாவது சொன்னார். திருவள்ளுவர் ஒரு சொல்லைக்கூட எங்கே வைக்கவேண்டுமோ அங்கே வைத்திருக்கிறார்.

1 thought on “அதிகாரம் – 2 குறள் – 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *