நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
விளக்கம்;-
மேலே கூறிய ஒன்பது குறளிலும் நீர் இன்றி இந்த உலகம் அமையாது என்று சொன்னார். பத்தாவது குறளிலும் அதையே கூறுகிறார்.
யார்யார்க்கும் – உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லோருக்கும் மழை அவசியம் எனவே அடுக்கிக் கூறுகிறார்.
உலகம் (உலகியல்) – பொருள், இன்பம் இதையே குறிக்கும்.
உலகம் இயங்குவதற்கு பொருள் இன்பங்கள் தேவை. இதற்கு அடிப்படையான நீர் தேவை. எனவே நீரின்றி இந்த பொருள் இன்பங்கள் அமையாது.
வானின் றமையாது ஒழுக்கு – வானமாகிய அந்த இடம் இல்லாவிட்டால் மழை இல்லை. அதுபோலவே மழை இல்லாவிட்டால் இந்த உலகமும் இயங்காது.
இப்படி இந்த அதிகாரத்தின் கடைசி மூன்று குறள்களிலும் அறம், பொருள், இன்பங்கள் நடப்பதற்கு மழையே அவசியம் என்று கூறப்பட்டது.
The article was well written. Thank you for publishing this article