உரனெனுந் தோட்டியனோ ரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
விளக்கம்;-
தோட்டி – அங்குசம்
உரன் – வலிமை, திண்மை (புத்தியின் பலம்)
ஐந்து (ஐம்பொறிகள்) – மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்பொறிகளாகிய யானையை அங்குசமாகிய புத்தியின் பலத்தினாலே அடக்குகிறவன் வீடுபேறாகிய நிலத்திலே முளைக்கிற வித்தாயிருப்பான் என்பதே இக்குறளின் விளக்கமாகும். அப்படி முளைக்கிற வித்துதான் துறவி என்கிறார் வள்ளுவர்.
தோட்டி என்கிற அங்குசத்தைப்பற்றிக் கூறிய வள்ளுவர் அதற்குப் பொருத்தமான யானையைக் குறளிலே கூறவில்லை. அதை பரிமேலழகர் உரைக்குறிப்பிலே கூறுகிறார்.
இதுவே ஏகதேச உருவகம் ஆகும். ஒரு பகுதியை உருவகித்து மற்றொரு பகுதியை உருவகிக்காமல் விடுவது ஏகதேச உருவகம்.
It was a good article, keep writing.