குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.
விளக்கம்;-
வெகுளி – கோபம்
குணமெனுங் குன்றேறி நின்றார் – குணங்களை அடுக்கிக் கொண்டே போனால் உச்சத்தில் வருவது துறவு. துறவுக்கு மேலே வருவது மெய்யுணர்வு. மெய்யுணர்வுக்கு மேலே வருவது அவாவின்மை. இந்த அவாவின்மை என்ற இடத்திலே (குன்றிலே) நிற்பவரே துறவி.
துறவி என்றாலே கோபம் வராது. வரவும் கூடாது. ஆனால் காமமும் கோபமும் மனிதனின் உயிர்க்குணங்கள். என்னதான் துறவி என்றாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் இந்த உயிர்க்குணங்கள் இருக்கும். மற்றவர்கள் சென்று கிளப்பிவிட்டால் அது வெளியே வந்துவிடும்.
மலை (குன்று) – மலை தளர்ச்சியடையாது. எந்நாளும் நிலைத்து நிற்கும். எனவே குணங்களை குன்று என்று கூறுகிறார்.
துறவிக்கு கோபம் எப்பொழுதாவது தான் வரும். அதுதான் கண நேரம். துறவிக்கு இயல்பாகவே மெய்யுணர்வு உண்டு. அந்த மெய்யுணர்வே கோபத்தை அடக்கிவிடும்.
கணமேயும் காத்தலரிது – இதற்கு இரு அர்த்தங்கள் உண்டு. ஒன்று துறவியின் கோபத்தை கண நேரம் கூட தாங்க முடியாது. மற்றொன்று துறவியின் கோபம் கணநேரம் தான் நிற்கும். இந்தக் கண நேரத்தில் கூட துறவிகளின் வார்த்தைகள் பலித்துவிடும்.
அரிது – இல்லை என்று உறுதியாகக் கூறுவது.
The article was well written. Thank you for publishing this article
It was a good article, keep writing.