அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை
மறத்திலி னூங்கில்லை கேடு.
விளக்கம்;-
முதல் குறளிலே அறத்தினை செய்வதால் வரும் நன்மை கூறப்பட்டது. இந்தக் குறளில் அறத்தினை செய்யாவிட்டால் கேடு வரும் என்பது கூறப்பட்டது.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் படி கூறியது கூறல் என்பது குற்றம். ஆனால் ஒரு விடயத்தை அழுத்திக் கூறுவதற்கு திரும்பத் திரும்பக் கூறலாம். இது விதிவிலக்கு. எனவே இந்தக் குறளிலும் முதல் குறளில் கூறியதை திரும்பவும் அழுத்தமாகவே கூறுகிறார்.
கூறியது கூறல் – வழிமொழிதல்.
அறம் செய்தால் மட்டுமே நன்மை வரும் என்று தெரிந்தும் அறம் செய்யாமல் விடுகிறோம் என்றால் மயக்கம் காரணமாகவே அதைச் செய்யாமல் விடுகிறோம். ஆகவே அறம் செய்யாவிட்டால் கேடு வரும்.
ஒரு விடயத்தை அழுத்திக் கூற வேண்டுமென்றால் முதலில் நேர்முகமாகச் சொல்லி பின்பு எதிர்மறையாகவும் சொல்ல வேண்டும். வள்ளுவரும் இதையே கையாளுகிறார்.
The article was well written. Thank you for publishing this article