ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.
விளக்கம்;–
ஒல்லும் வகையான்- தத்தமக்கியலுந்திறத்தான்
ஓவாமை – இடைவிடாது
செயல் மூன்று வகைப்படும்.
- மனதாலே செய்யலாம்
- வாக்காலே செய்யலாம்
- உடம்பாலே செய்யலாம்
இக்குறளிலே அறம் செய்யும் வழியைச் சொல்லுகிறார். எந்த நிமிடமும் அறம் செய்யும் சிந்தனையோடே இருக்க வேண்டும். நம்மால் இயன்றதை ஏதாவதொன்றை செய்ய வேண்டும். எந்ந வழியிலும் செய்ய வேண்டும். எப்போதும் செய்ய வேண்டும். இதுவே அற் செய்யும் முறை.
மனதாலே செய்வது – நல்லெண்ணம்
வாக்காலே செய்வது – நற்செயல்
உடம்பாலே செய்வது – நற்செயல்
இந்த மூன்றின் வழியாக எப்போதும் செய்வதே தர்மம் செய்யும் வழி.
அறம் செய்வது என்பது பொருள் கொடுப்பதல்ல கொடுக்கிற மனம்தான் முக்கியம்.
உதாரணம்;-
நாம் தினந்தோறும் காகத்திற்கோ பூனைக்கோ உணவு கொடுக்கிறோம் என்றாலும் அதுவும் அறமே. மனதாலே அடுத்தவர்களை வாழ்த்துவதும் அறமே. இக்குறளில் இதைத்தான் கூறுகிறார் வள்ளுவர்.