அதிகாரம் – 4 – குறள் – 34

Uncategorized

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற

னாகுல நீர பிற.

விளக்கம்;-

திரிகரண சுத்தி – திரிகரணம் – மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்றிலே மனம் முக்கியம். அறத்தையே முதலாவது மனதிலே விதைக்க வேண்டும். மனதில் விதைத்த அறம் வார்த்தையாக வந்து செயலாக மாறும்.

விரும்புதல் – மனச்செயல்

நீர – தன்மைய

மனதை தயார் படுத்த வேண்டும். தர்மம் மிகுந்த மனதில் அழுக்கு படியாது. மனதிலே அறத்தைப் பதித்துவிடுவது தான் இருக்கிறதிலேயே சிறப்பு. வாக்காலே செய்வதும் உடம்பாலே செய்வதும் ஆரவாரத்துக்குரியது. முந்தின குறளிலே மனதாலே செய்வதும் வாக்காலே செய்வதும் உடம்பாலே செய்வதும் அறம் என்று கூறினார். இந்தக் குறளிலே மனதாலே செய்வதுதான் மிகவும் சிறப்பு என்கிறார்.

ஆகுல நீர – ஆரவாரத்திற்குரிய

வாக்காலே செய்வதும் உடம்பாலே செய்வதும் வெளி உலகத்துக்குத் தெரியும். மனதாலே நினைக்கும் அறம் வெளியே தெரியாது.

குற்றம் – தீயன சிந்தித்தல்

“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாமை வேண்டும்” என்பது வள்ளலார் வாக்கு. இதைத் தான் திருவள்ளுவரும் கூறுகிறார்.

மனதிலே ஒன்றை வைத்து செய்ய முடியாமல் போனாலும் குற்றமில்லை. ஆனால் மனதிலே ஒன்றை வைத்து வெளியிலே ஒன்றைச் செய்தால் அது குற்றம். அதுவே நாடகம். இப்படிப்பட்டவர்களை சிற்றினம் என்கிறார் வள்ளுவர்.

1 thought on “அதிகாரம் – 4 – குறள் – 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *