அதிகாரம் – 4 – குறள் – 35

இலக்கியம்

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு

மிழுக்கா வியன்ற தறம்.

விளக்கம்;-

அறம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

  1. துறவறம்
  2. இல்லறம்

இல்லறத்தான் அறம் செய்யும் போது அவனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். பொருள் அளவு எல்லைக்கு ஏற்பச் செய்ய வேண்டும்.

துறவறத்தானுக்கு விரதங்கள் வகுக்கப்படுவதால் அவரது உடல் அளவு எல்லைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும்.

எனவே இந்த இரண்டு பேரும் தனக்கு விதிக்கப்பட்ட அறங்களை அவர்களது எல்லைக்குட்பட்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும்.

அழுக்காறு – பிறருடைய ஆக்கத்தைப் பொறுத்துக்கொள்ளாமையே பொறாமை.

அவா – புலன்கண் மேற்செல்கின்ற அவாவும் (ஆசை)

வெகுளி (கோபம்) – அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் கோபம்

இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்

அறம் செய்வதற்கு இந்த நான்கு விடயங்கள் நிச்சயம் இல்லாமல் இருக்க வேண்டும்.

இழுக்கா வியன்ற தறம் – இவற்றை நீக்கி மிச்சமிருப்பதே அறம்.

இந்த நான்கும் கலந்திருந்தால் அவை அறம் ஆகாது. எப்படியென்றால் அடுத்தவருக்குப் போட்டியாக தர்மம் கூட செய்யக்கூடாது.

பிறர் நன்றாக இருப்பதைக் கண்டு பொறுக்காமல் கோபம் வரும். பின்பு இன்னாச்சொல் (கடுஞ்சொல்) வரும். இவைகளை வைத்துக்கொண்டு செய்கிற தர்மம் தர்மம் ஆகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *