செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.
விளக்கம்;-
செய்ய வேண்டியது அறன்; ஒழிக்க வேண்டியது தீவினை.
செயற்பாலதோரும்; குயற்பாலதோரும் – ஓரும் என்பது அசைச் சொல். எனவே இதற்குப் பொருள் கிடையாது. ஓசையை நிறைவு செய்ய வந்த சொல்.
அறனே என்பது தேற்ற நிலை ஏகாரம். தேற்றநிலை ஏகாரம் என்றால் உறுதிப்படுத்த வந்த ஏகாரம். முதல் அடியில் போட்ட ஏகாரத்தை அடுத்த அடியில் நம்மைப் போடச் சொல்லி விட்டு விடுகிறார் வள்ளுவர். எனவே உயர்பாலதோரும் பழியே என்றே படிக்க வேண்டும்.
தீவினை பழித்துப் பேசப்படும். எனவே தான் அதனைப் பழி என்கிறார்.
திருவள்ளுவர் முடிவிலே எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று கூறுவார். இப்படி இரண்டையும் சேர்த்துக் கூறுவார்.
பாயிரவியல் முற்றிற்று.