துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
விளக்கம்;-
துறந்தார்க்கும் – இது துறவிகளைக் குறிக்கவில்லை. காக்க வேண்டியவர்களால் (பெரியவர்கள், குழந்தைகள்) காக்கப்படாமல் விடப்பட்டத் துறக்கப்பட்டவர்களை குறிக்கும். இப்படிப்பட்டவர்களை ஆதரிப்பது இல்லறத்தானின் கடமை.
துவ்வாதவர்க்கும்– விதியினாலே வறுமையிலே இருப்பவருக்கு உணவு முதலிய மற்றவற்றைக் கொடுத்து இல்லறத்தார் ஆதரிக்க வேண்டும்.
இறந்தார்க்கும் – அந்நியர் எவராயினும் நம் வீட்டின் முன்பாக இறந்து அநாதையாகக் கிடந்தால் அவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராயினும் அந்த முறைப்படி நீர்க்கடன் செய்ய வேண்டும். இது இல்லறத்தானின் கடமை.
முதல் குறளிலே மூன்று கடமைகளைக் கூறினார். இந்தக் குறளிலே மூன்று கடமைகள் என்று ஆறு கடமைகளைப் பற்றிச் சொல்லிவிட்டார்.