பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
விளக்கம்;-
கடந்த குறளிலே கூறிய பதினொரு கடமைகளைச் செய்வதற்குப் பொருள் தேவை. பொருள் இல்லாவிட்டால் அந்தக் கடமைகளைச் செய்ய முடியாது. பொருளைச் சம்பாதிக்கவே பிரம்மச்சரியம் என்ற காலப்பகுதியை இறைவன் ஒதுக்கிக் கொடுத்து “உன் காலிலே நீ நின்று நிதியைத் தேடு” என்ற ஒரு வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கிறார். பொருள் தேடுவது பதினொரு கடமைகளைச் செய்வதற்கு அல்ல. தேடுகிற பொருளைப் பழியஞ்சித் தேட வேண்டும்.
பழி – உலகம் தூற்ற நாம் செய்வது
பாவம் – நம் ஆத்மாவில் பதிவது. நமது ஆத்மாவை இழிவுபடுத்துவது.
எனவே பழியஞ்சித் தேடிய பொருளையே பகுத்து உண்ண வேண்டும். பழி எதுவுமில்லாமல் வந்தப் பணத்தை முதல் மூவருக்கும் தென்புலத்தார் முதலிய ஐவருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
இப்படிச் செய்யாமல் (கையூட்டு, களவு) பழியோடு பணத்தைத் தேடி அந்தப் பணத்தைக் கொண்டு மேற்கூறிய கடமைகளைச் செய்தால் அதனால் வரும் புண்ணியம் அந்தப் பணம் எவருக்குச் சொந்தமோ அவருக்கேச் சென்றுவிடும். அதைச் செய்த பாவம் உனக்கு மிஞ்சும் என்கிறார் வள்ளுவர்.
எனவே பழியஞ்சித் தேடிய பொருளைப் பகுத்து உண்பதால் பரம்பரை தொடர்ந்து நிலைக்கும்.
Nice post, worth reading. Thankful