அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
விளக்கம்;-
அன்பு பண்பாகவும் அறம் பயனாகவும் இருப்பதே இல்லறம்.
அன்பும் அறனும்
பண்பும் பயனும்
மேலே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் கீழே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் இணைத்துப்பார்க்க வேண்டும். அதுபோலவே மேலே உள்ள இரண்டாவது சொல்லையும் கீழே உள்ள இரண்டாவது சொல்லையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதற்கு நிரல் நிறை என்று பெயர்.
இல்வாழ்க்கையில் அன்பே முக்கியம். கணவர் மனைவியிடத்திலும் மனைவி கணவரிடத்திலும் அன்பாக இருப்பதை இரு பெற்றோர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அன்பாக இருக்கும் படி பெரியவர்கள் வலியுறுத்த வேண்டும்.
பெண்ணானவள் உடன்பட்டால் மட்டுமே ஆண் அறம் செய்ய முடியும். இல்லற வாழ்க்கையில் அறம் செய்ய விரும்புகிற ஆண் மனைவியை அவளுடைய அன்பை தன் வயப்படுத்த வேண்டும். இவ்வாறாக கணவனின் அன்பைப் பெற்ற மனைவியே உலகத்தில் அன்பைக் காட்டுவாள்.
கணவன் மனைவி ஒத்தக் கருத்துடையவர்களாக இருக்க வேண்டும். ஒத்தக் கருத்து இருந்தால் மட்டுமே அறம் செய்ய வேண்டும். இரண்டு மனிதர்கள்; இருமனம்; இரு புத்தி ஆனால் எண்ணம் மட்டும் ஒன்றாக இருக்கும். கணவரின் குறிப்பறிந்து செய்யும் மனைவி அமைந்தால் மட்டுமே அறம் செய்ய முடியும் இதுவே இல்லறம்.
இம்மூன்று குறள்களிலும் அறம் செய்யும் முறையைக் கூறுகிறார் வள்ளுவர்.
The article was well written. Thank you for publishing this article