இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
விளக்கம்;-
துறந்தார் என்பவரே முற்றம் துறந்த துறவியாவார். முயல்வார் என்றார் துறவு நோக்கி முயற்சிக்கிறவர் ( வானப்பிரஸ்தன்)
கடந்த குறளிலே கூறியதையே இந்தக் குறளிலும் கூறுகிறார். இல்லறத்தானை துறவியோடு ஒப்பிடவில்லை. வானப்பிரஸ்தனோடு ஒப்பிடுகிறார். முயல்வாருள் என்று பன்மையில் எதற்குக் கூறினாரென்றால் பல்வகைப்பட்ட மக்களும் துறவு நோக்கி முயற்சிக்கின்றனர். ஏதோ ஒன்றை துறக்கிறோம் என்றாலே துறவு நோக்கி முயற்சிக்கிறோம் என்று பொருள்.
நமக்குப் பிடித்த ஒன்றை நாமாக விடுகிறோம் அல்லது உடம்பு தானாகவே விடச் சொல்கிறது. மறுமைப்பயனாகிய சொர்க்கத்தை துறவு நோக்கி முயற்சிக்கிறவன் கடினப்பட்டு அடைகிறான். ஆனால் இல்லறத்தானோ எல்லாவற்றையும் அனுபவித்து சொர்க்கத்தை அடைகிறான்.
உதாரணம்;-
காசிக்குப் போனால் நமக்குப் பிடித்தமான ஒரு விடயத்தை விட்டுவிட வேண்டும் என்பது நியதி. இன்போசிஸ் நிறுவனர் சுதா மூர்த்தி அவர்கள் காசிக்குச் சென்று நதியில் மூழ்கியபோது தனக்கெனப் புடவைகள் வாங்குவதை விட்டுவிட முடிவெடுத்து இன்று வரை கடைபிடத்து வருகிறார். இதுவே துறவு நோக்கி முயற்சிக்கும் நிலை.
Thank you for writing this article, I really enjoyed reading it