அதிகாரம் – 6 – குறள் – 56

இலக்கியம்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

விளக்கம்;-

கடந்த குறளிலே பெண்ணுக்குக் கிடைத்த ஆற்றல் பற்றி பார்த்தோம். அந்த ஆற்றலை வைத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வி வருகிறது. எனவே அதற்கான பதில் என்னவென்று பார்க்கலாம்.

பெண் கற்புள்ளவளாக இருப்பதற்கு கணவனே காரணம். எனவே, பெண்ணானவள் கணவராலே ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தினாலே கற்பைப் பெற்று கற்பினாலே ஆற்றல் பெற்று அந்த ஆற்றலினாலே தன் கணவனையும் காப்பாற்றுவாள்.

தற்காத்து – கற்பினால் கிடைக்கிற ஆற்றலினாலே தன்னையும் காத்து

தற்கொண்டாற் பேணி – தன்னைக் கொண்ட கணவனையும் பேணி

தகைசான்ற சொற்காத்து – அமைந்தால் இப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும் என்று ஊரார் மெச்சும் படி வாழ்வது. இருவர் குடும்பத்துப் புகழையும் காப்பாற்றுவது.

சோர்வு – மறவி (கடைசி வரை ஒழுக்கத்தில் பிசகாமல் இருப்பாள் என்று பொருள்)

இந்தக் குறளிலும் கற்புடைய பெண்ணின் சிறப்புக் கூறப்பட்டது.

248 thoughts on “அதிகாரம் – 6 – குறள் – 56

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *