அதிகாரம் – 6 – குறள் – 60

இலக்கியம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

விளக்கம்;-

மங்கலம் – நன்மை

ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மை என்பது நற்குண நற்செய்கையோடு கூடிய மனைவி கிடைப்பதுதான். இப்படிப்பட்ட மனைவி கிடைத்த வாழ்க்கைக்கு நன்கலமாக அமைவது நல்ல புதல்வர்களைப் பெறுதலாகும்.

மங்கலம் என்பது மனைமாட்சி

நன்கலம் என்பது நன்மக்கட்பேறு – இதனை யார் சொல்வார்கள்?

அறிந்தோர் சொல்வார்கள் என்று பரிமேலழகர் உரைக்குறிப்பிலே கூறுகிறார். குறளிலே அறிந்தோர் என்பது சொல்லப்படாமல் நிற்கிறது. இதை நாம்தான் வருவித்துக்கொள்ள வேண்டும்.

மற்றது – மற்று என்பது அசைநிலை. அதாவது ஓசையை நிறைவு செய்ய வந்த சொல் அதற்குப் பொருள் தேடக்கூடாது.

அடுத்த அதிகாரம் மக்கட்பேறு அதனால் அதற்கு முகப்புக் கட்டுவதற்காக நன்கலம் என்பது நன்மக்கட்பேறு என்று முடிவுரையாக எழுதுகிறார் வள்ளுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *