அதிகாரம் – 7 – குறள் – 63

இலக்கியம்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்.

விளக்கம்;-

முதல் குறளிலே குழந்தைப் பேற்றினுடைய சிறப்பைச் சொன்னார். இரண்டாவது குறளிலே அந்தப் பிள்ளைகளைப் பெறுவதினாலே கிடைக்கக்கூடிய பயனில் ஒன்றைச் சொன்னார். இந்தக் குறளிலும் இதையே வலியுறுத்துகிறார்.

உலகியலிலே பொருள் அவசியம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

பொருளோ பணமோ நம்மிடம் நிலைக்க வேண்டுமானால் அதைப் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் அது நிலைக்கும். பிரபல எழுத்தாளர் ரோண்டா பைர்ன் எழுதிய நூல் மாயாஜாலம். இப்புத்தகத்தில் பணத்தைக் குறித்து நாம் எவ்வளவு நன்றியறிதல் உள்ளவர்களாய இருக்கிறோமோ அப்பொழுதுதான் அது அபரிமிதமானதாக பெருகும் என்று கூறுகிறார்.

பொருளினால் வருகிற பயன்கள்;-

  1. போகம் – இப்பிறவியிலே பயன்தரும்.
  2. புண்ணியம் – மறுமையிலே பயன்தரும்.

போகம்;-

நாம் சம்பாதிக்கும் பணத்தை நன்றாக அநுபவிக்க வேண்டும்.

மனுஷன் புசித்துக் குடித்து தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும் அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை (பிரசங்கி 2.24) என்கிறது கிறித்தவ மறைநூல்.

புண்ணியம்;-

ஆற்றுநர்க்(கு) அளிப்போர் அறவிலை பகர்வோர்;

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்;

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை;

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்(கு) எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை (92-96)

பாடல் விளக்கம்;-

வசதியுள்ளவர்களுக்கு உணவு கொடுப்பது தர்மத்தை விற்பதற்குச் சமம். ஆனால் உணவுக்கு (அரும்பசி) வழியில்லாதவர்களுக்கு உணவு கொடுப்பதே மெய்நெறி வாழ்க்கை. அதுவே தரும புண்ணியம்.

இக்குறளின்படி எது பொருள்?

நாம் இப்பிறவியில் செய்யும் புண்ணியம் எல்லாம் அடுத்தடுத்த பிறவியில் குறைந்து கொண்டே சென்று இறுதியில் முற்றிலும் இல்லாமலே போய்விடும். ஆனால் பிள்ளைகளைப் பெற்று சந்ததி தொடரும்போது அவர்கள் முன்னோர்களை நினைத்து பிதுர்க்காரியம் செய்வர். இப்படி மகன், பேரன், பூட்டன் என்று தொடர்ச்சியாக பிதுர்க்காரியம் செய்வர். எனவே பிள்ளைகளின் மூலமாக வரும் புண்ணிய பலன் பல பிறவிகளுக்குத் தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருக்கும். ஆகவேதான் பொருள் (தம்பொருள் என்பதம் மக்கள்) என்று திருவள்ளுவர் பிள்ளைகளையே குறிப்பிடுகிறார்.

இந்தப் பிள்ளைகளும் முந்தைய குறள்களின்படி அறிவுள்ள பண்புள்ள பிள்ளைகளாய் இருந்தால் மட்டுமே புண்ணிய பயன் கிடைக்கும்.

இந்த இரண்டு குறள்களிலும் புதல்வரைப் பெறுவதினால் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது.

8 thoughts on “அதிகாரம் – 7 – குறள் – 63

  1. 金发女郎对伴侣进行口交,之后她在阴户中得到了一个躯干,过了一会儿,在屁股中得到了第二个躯干。

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *