தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
விளக்கம்:-
கடந்த ஆறு குறள்களிலும் முறையே புதல்வரைப் பெறுவதால் கிடைக்கும் மறுமைப்பயன், இம்மைப்பயன் பற்றிக் கூறிவிட்டார். இந்தக் குறளில் தந்தை பெற்ற பிள்ளைகளுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று கூறுகிறார்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி – தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது.
அவையத்து முந்தி இருப்பச்செயல் – கற்றறிந்தவர்கள் இருக்கும் சபையில் பிள்ளை சான்றோனாகவும் தறைசிறந்த கல்வியாளனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கச் செய்வதே தந்தையின் வேலை. சொத்து, பணம் போன்றவற்றைச் சேர்த்து வைப்பது அல்ல.
பொருள் சேர்ப்பது தவறல்ல. பொருளைத் தேடுவது கடினம். அதனைப் பாதுகாப்பதும் கடினம். அந்தப் பொருளை இழந்து போவதும் கடினம்.
ஆனால் கல்வி அப்படியல்ல. சேர்ப்பதில் மகிழ்ச்சி. அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சி. பாதுகாப்பதில் மகிழ்ச்சி.
எனவேதான் தந்தை செல்வத்தை விடவும் கல்வியையே பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இக்குறள் தந்தைக்கடன் பற்றிக் கூறுகிறது.
குறள் விளக்கம் அருமை. பழகு தமிழில் எளிதாக புரியும் நடையில் எழுதும் நுட்பத்தில் கெட்டிக்காரர் பிரிசில்லா உதயா. தொடரட்டும் தமிழ்த் தொண்டு
பாராட்டியதற்கு நன்றிகள் ஐயா
Thank you for writing this article, I really enjoyed reading it