மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
எனநோற்றான் கொல்லெனும் சொல்.
விளக்கம்:-
கடைசிக்குறளிலே தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடனைச் சொல்லுகிறார்.
பாரிசேட நியாயம் என்று ஒரு நியாயம் இருக்கிறது. சேடம் என்றால் மிச்சம் என்று பொருள். ஒரு விடயம் சொன்னால் அதன் மிகுதியை வைத்து இன்னொரு விடயத்தைக் கண்டுபிடிப்பது. இதன்படி இக்குறளிலே தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையைக் கூறியிருக்கிறார். தாய்க்கு மகன் செய்ய வேண்டிய கடமையை ஏன் கூறவில்லை என்ற கேள்வி வருகிறது.
இதற்கான பதிலைப் பார்க்கலாம். ஒரு மகனால் தன் தாய்க்கு கடமை ஆற்றவே முடியாது. ஏனென்றால் தாயின் அன்பு பிரதிபலன் பார்க்காத தூய்மையான அன்பு. எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத அன்பு தாயிடம் மட்டுமே உண்டு. இந்த அன்புக்கு எந்தப் பிள்ளையாலும் கடமை ஆற்ற முடியாது. பிரதிபலனும் செய்ய முடியாது. ஆகவே பாரிசேட நியாயத்தின்படி இதற்குத் தனியே குறள் வைக்கவில்லை என்று நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்.
சமூகத்தில் உயர்ந்தவர்களும் நல்லவர்களும் ஒரு மகனைப் பார்த்து இப்படி ஒரு மகனைப் பெற்றெடுக்க அவனுடைய தந்தை என்ன தவம் செய்தாரோ என்று சொல்ல வேண்டும். இந்த நல்வார்த்தையைக் கேட்கப்பண்ணுவதே மகனின் கடமையாகும்.
Thank you for writing this article, I really enjoyed reading it