அதிகாரம் – 8 – குறள் – 76

இலக்கியம்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்:-

அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் – அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார், மறத்திற்கும் அஃதே துணை – ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

பகையை நீக்குவதற்கு அன்பு செய்வதே வழி. பகைக்குப் பகைச் செய்யச் செய்யப் பகை வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படிப் பகைத்துக் கொள்பவர்கள் இருவரும் நிம்மதியில்லாமல் மன அமைதியை இழந்து தவிப்பார்கள்.

தீமைக்குத் தீமைச் செய்தால் ஒருபோதும் நிம்மதி வராது. உள்ளத்திலே பகை எப்பொழுது இல்லாமல் போகிறதோ அப்பொழுதுதான் மன அமைதி வரும். இந்த இடத்தில் இயேசு பெருமானின் போதனைப்படி நமக்குத் தீங்கு செய்தவர்களை மனப்பூர்வமாகப் பொறுத்துக்கொள்ளும் போது நம் மனதிலே இனம்புரியாத அமைதி கண்டிப்பாக வந்துவிடும்.

இப்போதுக் குறளுக்குள் வரலாம். அறத்திற்கு அன்பு துணையாவது போல மறத்திற்கும் அஃதே துணை என்பதற்குப் பரிமேலழகர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

நோய்க்கு மருந்தே துணை என்று பொருள் கொள்ள முடியாது. ஏனென்றால் நோயை நீக்குவதற்குத்தான் மருந்து துணையாகிறது.

அதே போல மறத்தை (கோபத்தை) நீக்குவதற்கு அன்பு துணை செய்கிறது என்கிறார் பரிமேலழகர்.

இந்த ஐந்து குறள்களிலும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

49 thoughts on “அதிகாரம் – 8 – குறள் – 76

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *