அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம்:-
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை – மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல், வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.
பரிமேலழகர் எப்பொழுதும் குறளில் ஒரு சொல்லை மாற்றிப் போட்டு விளக்கம் தருவார். அப்படிச் சொல்லை மாற்றிப் போட்டு வாசித்தால் தான் நமக்கும் எளிதாக பொருள் புரிகிறது. எனவேதான் அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை என்று எழுதுகிறார். வாழ்க்கை என்பதை இல்லறம் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், அன்புடைமை என்ற அதிகாரம் இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ளதே.
வன்பாற்கண் வற்றல் ஆகிய மரம் தளிரத்தார் போலும் என்றால் பாலைவனத்தில் வாடிய தாவரம் மீண்டும் துளிர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், பாலைவனத்தில் மழை பெய்வதில்லை. நீருற்றும் அங்கே இருப்பதில்லை. மனிதர்கள் சென்று அங்குள்ளத் தாவரங்களைப் பராமரிப்பதுமில்லை. தண்ணீர் ஊற்றுவதுமில்லை.
அதுபோலவே, இல்லற வாழ்க்கையில் இணைக்கப்பட்டக் கணவன் மனைவியரிடத்தில் செல்வமும் செல்வாக்கும் பெயரும் புகழும் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அன்பு இல்லையென்றால், அவர்களின் வாழ்க்கை துளிர்ப்பதில்லை.
The article was well written. Thank you for publishing this article