அதிகாரம் – 8 – குறள் – 80

இலக்கியம்

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம்:-

அன்பின் வழியது உயிர்நிலை – அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது, அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன.

இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் இல்லறத்தில் அன்பு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறுகிறது. ஆகவே அன்பு இல்லாமல் மனைவி குழந்தைகளிடம் அதைக் காட்டாமல் இல்லற வாழ்வில் இருப்பவர்கள் உயிரில்லாத உடம்புக்குச் சமமாவார்கள் என்கிறார் வள்ளுவர்.

தன்னைப் பிணமாக ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியுமானால் அன்பில்லாமலும் இல்லறம் நடத்தலாம் என்கிறார்.

உயிர் இல்லாத உடம்பு எப்படி பிணம் என்று அழைக்கப்படுகிறதோ அப்படியே அன்பு இல்லாத இல்லாத இல்லறமும் பிணத்திற்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.

இந்நான்கு குறள்களும் அன்பு இல்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

540 thoughts on “அதிகாரம் – 8 – குறள் – 80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *